இதுகுறித்து முதல்
முறையாக வாய் திறந்துள்ளார் நடிகை டாப்ஸி. "மகத் எனக்கு நல்ல நண்பர். சூட்டிங் இருக்கும் போது காரில் அழைத்து போய் என்னை அவர் இறக்கி விடுவது உண்மைதான். சக நடிகர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்றுதான் இதுவும்," என்று அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். தமிழ் படங்களிலும் நடிக்கிறேன். இதுவரை எந்த ஒரு இயக்குனரோ, தயாரிப்பாளரோ என்னைப் பற்றி தவறாக இதுவரை எந்த புகாரும் கூறியது இல்லை.
மகத் எனக்கு நல்ல நண்பர். சூட்டிங் இருக்கும் போது காரில் அழைத்து போய் என்னை அவர் இறக்கி விடுவது உண்மைதான். சக நடிகர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்றுதான் இதுவும்.
மகத்துக்கு நிறைய சினிமா தொடர்புகள் உள்ளன. சிம்புவுக்கு சிறு வயதில் இருந்தே அவர் நண்பர். தயாநிதி அழகிரிக்கும் நன்றாக தெரியும். எனவே அவருக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் நான் சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் இல்லை," என்றார்.
மங்காத்தா படத்தில் நடித்த மகத்துக்கும் நடிகை டாப்ஸிக்கும் காதல் என்று கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது.




No comments:
Post a Comment