
தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார். அதுவும் முதல்படமே இந்தியில் எடுக்க போகிறார்.
நடிக்க வரும்போதே, நிச்சயம் நான் படம் இயக்குவேன் என்று கூறிவந்தவர் நடிகர் தனுஷ். தமிழில் தற்போது, முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர், தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் "3" படத்தில், ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கூடவே மனைவிக்கு உதவியாளராகவும் இருந்து வருகிறார். தனுஷ் ஏற்கனவே நிறைய குறும்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் முதன்முறையாக ஒரு படம் இயக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
சமீபத்தில் மும்பை சென்ற தனுஷ், பாலிவுட் முன்னணி நடிகர் ஒருவரை சந்தித்து ஒரு கதையை கூறியிருக்கிறார். தனுஷின் கதையை கேட்டதும், அந்த நடிகருக்கும் பிடித்து போய்விட்டதாம். மேலும் விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். தனுஷ்க்கும் ஏகப்பட்ட சந்தோஷமாம். 3 படத்திற்கு பிறகு, இந்தபடத்தை தனுஷ் துவங்குவார் எனத் தெரிகிறது. மேலும் படத்தில் டைரக்ஷ்ன் பொறுப்புடன், ஒரு முக்கிய வேடத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறாராம்.
விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.




No comments:
Post a Comment