சின்னத்திரைதானே என்ற அலட்சிய போக்கை முதன் முறையாக உடைத்தெறிந்தவர் அமிதாப்பச்சன். இவர் தோன்றி நடத்திய குரோர்பதி நிகழ்ச்சி வட இந்தியாவில் பர
பரப்பை கிளப்பியது நினைவிருக்கலாம். அதன்பின் இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற பெயரில் நடத்தினார் சரத்குமார். நீங்கள் போய் சின்னத்திரையில் எப்படி? என்று வியந்தவர்களிடம், அமிதாப்பே செய்யும் போது எனக்கென்ன என்றார் சரத். இப்போது இதே கேள்விக்கு இதே மாதிரி பதிலை நடிகர் விஜய்யும் சொல்லக் கூடும்.

காரணம், மிகப்பெரிய சேனல் ஒன்று விஜய்யை இதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றுக்காக அணுகியிருக்கிறதாம். ஆரம்பத்தில் பின்வாங்கிய விஜய், அப்புறம் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி அவர் சம்மதித்திருப்பது நிஜம் என்றால், இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்புகள் பிரமாண்டமாக வெளியிடப்படுமாம்.
No comments:
Post a Comment